கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றாத பஸ் கண்டக்டர்களுக்கு அபராதம்
ஆற்காடு பகுதியில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றாத பஸ் கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு
ஆற்காடு பகுதியில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றாத பஸ் கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளில் பஸ்சில் இருக்கைகளில் மட்டும் தான் அமர்ந்து செல்லவேண்டும் நின்று செல்ல அனுமதி கிடையாது.
இந்த விதிகளை தனியார் பஸ்சில் பின்பற்றப்படுகிறதா என்று ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் அதிகாரிகள் ஆற்காடு அருகே புதுப்பாடி, கலவை கூட்ரோடு பகுதி வழியாக வந்த தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அரசு விதிகளை பின்பற்றாத பஸ்களின் கண்டக்டர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story