இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

சாயர்புரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள புளியநகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வ கர்ணன் மனைவி உச்சிமகாளி (வயது 23). இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாராம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று உச்சிமகாளி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story