குப்பைக்கு வைத்த தீயில் கார் எரிந்தது
ஆம்பூர் அருகே குப்பைக்கு வைத்த தீயில் கார் எரிந்தது.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே குப்பைக்கு வைத்த தீயில் கார் எரிந்தது.
ஆம்பூர் அருகே தேவாலாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சாணாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு நபர் பழுது பார்ப்பதற்கு காரை விட்டு சென்றார்.
ஆனால் அவர் மீண்டும் காரை எடுத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோவிந்தசாமி அந்த காரை சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் சமூக விரோதிகள் சிலர் கார் நிறுத்தி வைத்து இருந்த இடத்தின் அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பரவி காரில் தீப்பிடித்தது.
அந்த வழியாக சென்ற சிலர் இதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் நிறுத்தி இருந்த மற்ற வாகனங்கள் சேதமின்றி தப்பியது.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story