கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்கள் அச்சமின்றி செய்முறை தேர்வு எழுத நடவடிக்கை தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரி உத்தரவு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்கள் அச்சமின்றி செய்முறை தேர்வு எழுத நடவடிக்கை தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 10 April 2021 8:14 PM IST (Updated: 10 April 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்கள் அச்சமின்றி செய்முறை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்முறை தேர்வு நடத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர்கள் கார்த்திகா, மணிமொழி, ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமூக இடைவெளி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் அச்சமின்றி செய்முறைத்தேர்வை எழுத உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வகங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், மாணவர்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் செய்முறைத்தேர்வை எழுதுதல், சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவுதல், பள்ளி வளாக தூய்மை மற்றும் சுகாதாரமான குடிநீர் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும் என ஆலோசனை வழங்கி பேசினார். 
இதில் முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்கள் கோபி, ஆனந்தன், கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், பிரிவு அலுவலர் காண்டீபன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story