தியாகதுருகம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
சுகாதார சீர்கேடு
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே கனங்கூர் காலனி பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெற்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழீவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் வழியே அப்பகுதி மக்கள் நடந்து சென்று வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க தெற்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story