கொடைக்கானலில் குளுகுளு சீசனை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில்  குளுகுளு சீசனை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 10 April 2021 8:26 PM IST (Updated: 10 April 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


கொடைக்கானல்:
‘ஏழைகளின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. இதை அனுபவிப்பதற்காகவும், தொடர் விடுமுறை நாட்களையொட்டியும் நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். குறிப்பாக கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பஸ்கள் மற்றும் கார்களில் வந்து இருந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக நகர் பகுதியிலும், சுற்றுலா இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் உல்லாசமாக படகு சவாரி செய்தனர். இதில் சிலர் ஆபத்தை உணராமல் படகில் நின்றபடியே செல்பி எடுத்தனர். 
மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கினர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பகலில் வெப்பமும் அதனை தொடர்ந்து மாலை நேரத்தில் மேக மூட்டமும் நிலவியது. 
இந்த குளுகுளு சீசனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story