தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பிரிவு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலர் கணேசன், வணிகர் அணி அமைப்பாளர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரக்கோணத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் சூர்யா, அர்ஜூன் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். படுகாயம் அடைந்த இளைஞர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். கொலையாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் காஜா முகமது, துணை அமைப்பாளர் முத்தலிபு, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சம்சுதீன், செயலர் முகமது ஜான், தமிழர் விடியல் கட்சி பொறுப்பாளர் சந்தனராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அமல்ராஜ், குமார், அஜீஸ், பட்டு வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story