பள்ளத்தில் கார் உருண்டு முதியவர் பலி
பள்ளத்தில் கார் உருண்டு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இவரது குடும்பத்தினர் மற்றும் அவரது பெரியப்பா மகன் பூதன் (வயது60) ஆகியோருடன் சத்திரக்குடி அருகே உள்ள அரியகுடிபுத்தூர் கிராமத்தில் உறவினர் ஒருவரின் இறப்புக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்தனர். அப்போது தபால் சாவடி அருகே வரும்போது மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது சாலையின் வளைவில் வளையும் போது டிரைவர் வேந்தோணி கிராமத்தை சேர்ந்த பழனி மகன் தாமரைச்செல்வன் பிரேக் போட்டுள்ளார். அப்போது கார் நிலை தடுமாறி சாலையில் இருந்து உருண்டு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழந்தது. இதில் காருக்குள் இருந்த பூதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வண்டிக்குள் இருந்த கணபதி மற்றும் அவரது மனைவி அக்னீஸ்வரி படுகாயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story