கவுசிகா ஆற்றில் மரங்கள் வெட்டி சாய்ப்பு
கவுசிகா ஆற்றில் மரங்கள் வெட்டி சாய்ப்பு
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் கவுசிகா ஆறு பாய்கிறது. அந்த ஆற்றின் உள்புறம் மற்றும் ஆற்றின் கரையில் ஏராளமான மரங்கள் வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் இருந்த வேப்பமரங்களை சிலர் வெட்டி செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அவினாசி தாசில்தார் மற்றும் வஞ்சிபாளையம் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். மேலும் மரங்களை வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மரம் வெட்டப்பட்ட இடத்தின் ஒரு பகுதி கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் செம்மாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story