போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி


போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 April 2021 10:34 PM IST (Updated: 10 April 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் போலீசாருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி சுகாதாரபிரிவு அதிகாரிகள் மூலமாக தடுப்பூசி போடப்பட்டது. முன்களப்பணியாளர்களாக உள்ள போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று 55 போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

Next Story