அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளுர் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் மகன் விஜய் (வயது22). இவரின் உறவினரான திருப்பூரை சேர்ந்த தற்போது ராமநாதபுரம் கே.கே.நகரில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி சவும்யா (32) என்பவர் குடும்ப தேவைக்காக 13.5 பவுன் நகைகளை வாங்கி உள்ளார். இந்த நகையை திருப்பி கேட்டபோது தனக்கு அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும் உனது தம்பிகளுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் வாங்கிய சவும்யா அரசு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து விஜயர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சவும்யாவை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story