தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து தன்னார்வலர்களுக்கு செயல்விளக்க பயிற்சி
தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து தன்னார்வலர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தன்னார்வலர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்துவது, காட்டுத்தீ ஏற்படுவதை தடுப்பது குறித்து செயல்விளக்க பயிற்சி, ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் அளிக்கப்பட்டது.
இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் பேசும்போது, பருவமழை காலங்களில் சாலைகளின் குறுக்கே விழும் மரங்களை எந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்துவது, வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்பது, தீ விபத்தை ஆரம்ப கட்டத்தில் தீயணைப்பு கருவிகளை கொண்டு தடுப்பது குறித்து விளக்கி கூறினார்.
தொடர்ந்து தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கோடைகாலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும்போது தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பணிபுரிவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story