தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து
தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
ஊட்டி
ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் வர அனுமதி உள்ளது.
இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஒரு காரில் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். கல்லட்டி மலைப்பாதை 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கல்லட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story