மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு


மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 April 2021 11:07 PM IST (Updated: 10 April 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மார்க்கெட்டில் காந்தி மைதானம், நெல்லிதுறை ரோடு, பழைய நகராட்சி அலுவலக வீதி ஆகிய பகுதிகளில் 75-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. 

கடந்த 8-ந் தேதி மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு 50 லோடு வந்திருந்தது. இதில் கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டை ரூ.650-ல் இருந்து ரூ.750 வரையும், குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.650-ல் இருந்து ரூ.700 வரையும், திம்பம் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.750 வரையும் விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முடிந்து உருளைக்கிழங்கு மண்டிகள் நேற்று வழக்கம்போல செயல்பட தொடங்கின. மார்க்கெட்டுக்கு நேற்று கோலாரில் இருந்து 36 லோடு, குஜராத்திலிருந்து 6 லோடு திம்பத்தில் இருந்து 5 லோடு மட்டுமே உருளைக்கிழங்கு வந்திருந்தது.

உருளைக்கிழங்கு வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டை ரூ.750-ல் இருந்து ரூ.880 வரையும், குஜராத் உருளைக்கிழங்கு ரூ.750-ல் இருந்து ரூ.800 வரையும், திம்பம் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.700-ல் இருந்து ரூ.800 வரையும் விற்பனையானது. 

மேலும் மார்க்கெட்டில் உள்ள 3 இஞ்சி மண்டிகளுக்கு கர்நாடகாவில் இருந்து 800 மூட்டை இஞ்சி விற்பனைக்கு வந்திருந்தது. இஞ்சி 60 கிலோ கொண்ட மூட்டை ரூ.1200 வரை விற்பனையானது. கடந்த சில மாதங்களாக இஞ்சியின் விலை ஒரே சீராக காணப்பட்டதால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story