வாழைத்தார் விலை வீழ்ச்சி


வாழைத்தார் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 10 April 2021 11:24 PM IST (Updated: 10 April 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், சேமங்கி, பேச்சிப்பாறை, கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வாழைகளை பயரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை வெட்டி மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கின்றனர். இந்தநிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சூறாவளி காற்றால் ஏராளமான வாழைகள் முறிந்தது. இந்த வாழைத்தார்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், கற்பூரவல்லி ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சை நாடன் ரூ.200-க்கும், 15 0- க்கும் விற்பனையானது.

Next Story