புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 April 2021 11:24 PM IST (Updated: 10 April 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

கரூர்
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழக சுகாதாரத்துறை சார்பில்  வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கரூர் காகிதபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண், மேட்டுப்பட்டியை சேர்ந்த 20 வயது பெண், சின்னரெட்டிபட்டியை சேர்ந்த 37 வயது ஆண், முனையனூரை சேர்ந்த 49 வயது பெண், காளியப்பனூரை சேர்ந்த 55 வயது ஆண், கோவிந்தபாளையத்தை சேர்ந்த 57 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 37 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் 35 வயது ஆண், செங்குந்தபுரத்தை சேர்ந்த 39 வயது பெண், வடிவேல்நகரை சேர்ந்த 71 வயது மூதாட்டி உள்பட 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story