மாவட்ட செய்திகள்

மகாதானபுரத்தில் இருந்து அக்ரஹாரம் செல்லும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை + "||" + Bumpy, bumpy road

மகாதானபுரத்தில் இருந்து அக்ரஹாரம் செல்லும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

மகாதானபுரத்தில் இருந்து அக்ரஹாரம் செல்லும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
மகாதானபுரத்தில் இருந்து அக்ரஹாரம் செல்லும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மகாதானபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அக்ஹாரம் ஊருக்கு செல்லும் தார்சாலை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். இந்த சாலையில் தற்போது கற்கள் எல்லாம் பெயர்ந்து மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மகாதாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அக்ரஹாரத்திற்கு செல்பவர்கள் இந்த சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர். 
சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், முதியோர்கள் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். சிலர் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலையும் ஏற்படுகிறது. 
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் குண்டும், குழியுமான சாலையை புதிதாக அமைத்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இனியாவது அதிகாரிகள் வந்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
அய்யன்கொல்லியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
3. குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் பாலம் சீர்செய்யப்படுமா?
சீர்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் பாலம் சீர்செய்யப்படுமா? என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
4. சத்யா காலனியில் புழுதி பறக்கிறது குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி
திருப்பூர் சத்யா காலனியில் புழுதி பறக்கும் குண்டும், குழியுமான சாலையால் மக்கள் கடும்சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.