மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு


மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு
x
தினத்தந்தி 10 April 2021 11:25 PM IST (Updated: 10 April 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

மதுவில் விஷம் கலந்து குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

க.பரமத்தி
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தென்னிலை வடக்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில வருடங்களாக கால் மூட்டுவலி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மது குடிக்கும் போது அருகில் இருந்த அரளி விதையை அரைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story