கரூரில் வெவ்வேறு சம்பவத்தில் கோழி வியாபாரி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை


கரூரில் வெவ்வேறு சம்பவத்தில் கோழி வியாபாரி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2021 11:25 PM IST (Updated: 10 April 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் வெவ்வேறு சம்பவத்தில் கோழி வியாபாரி உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்
கோழி வியாபாரி தற்கொலை
கரூர் வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 49). கோழி வியாபாரி. இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கிேஷார்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிஷோர்குமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
 பின்னர் கிஷோர்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்
கரூர் வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் திருவேங்கட சுப்பிரமணி (34). நகை செய்யும் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் சுப்பிரமணிக்கு முதுகுத்தண்டுவடத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலையஏற்பட்டது. இதனால் மனமுடைந்த திருவேங்கட சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல்அறிந்த  பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் சம்பவ இடத்திற்கு வந்து, சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story