பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 10 April 2021 11:25 PM IST (Updated: 10 April 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

நச்சலூர்
பட்டதாரி பெண்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெலுங்குபட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28). இவர் மலேசியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் லால்குடி தாளகுடியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகள் சிந்தியா (22). எம்.எஸ்.சி. பட்டதாரி. சரவணகுமாரும், சிந்தியாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். 
இந்நிலையில் சிந்தியாவின் பெற்றோர் அவருக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து சிந்தியா தனது காதலர் சரவணக்குமாருக்கு போனில் தகவல் தெரிவித்தார். 
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
இதையடுத்து சரவணகுமார் கடந்த 8-ந்தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளார். பின்னர் 9-ந்தேதி விராலிமலை முருகன் கோவிலில் வைத்து சரவணகுமார், சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். 
இதையறிந்த சிந்தாவின் பெற்றோர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கேட்டு சிந்தியா தனது காதல் கணவருடன் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்து தஞ்சம் அடைந்து, புகார் கொடுத்தார். இதையடு்த்து போலீசார் விசாரணை நடத்தி, காதல் ஜோடியை உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Next Story