சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி


சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 April 2021 11:32 PM IST (Updated: 10 April 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்

பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே  சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ தரப்பில் கூறப்படுவதாவது
என்ஜினீயரிங் மாணவர்கள் 
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் பிரவீன்சங்கர் வயது 25. இதே போல் ஈரோடு வெள்ளோடை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் மனோரஞ்சன்  இவர்கள் 2 பேரும் விடுதியில் தங்கி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தனர். இவர்கள்  இருவரும் வாரம் தோறும் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் கல்லூரியில் வகுப்பு முடிந்ததும் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்சங்கர் ஓட்டினார். பின் இருக்கையில் மனோரஞ்சன் அமர்ந்து இருந்தார்.
2 பேர் பலி
இவர்களுடைய மோட்டார் சைக்கிள் கோவைசேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர்  மின்வாரிய அலுவலகம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த  2 பேரும்  தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து இறந்தனர். 
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story