நகைகளை திருடிய பெண் கைது
காங்கேயத்தில் வீடுபுகுந்து 10 பவுன் நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர்.
காங்கேயம்
காங்கேயத்தில் வீடுபுகுந்து 10 பவுன் நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர்.
10 பவுன் நகைகள் திருட்டு
திருப்பூர் காங்கேயம் களிமேட டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் துரைசாமிவயது 62. மின்வாரியத்துறையில் வேலை பார்த்து தற்போது ஓய்வுபெற்று மனைவி மகன் மருமகள், பேரன் ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 30-ந்தேதி இவரது விவசாய நிலத்தில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்காக வெளியூருக்கு கொண்டு சென்றுள்ளார். இவரது குடும்பத்தினர் அன்று காலை 11 மணியளவில் வீட்டைப்பூட்டி, சாவியை சமையலறையில் வைத்து விட்டு, அந்த அறையைப்பூட்டாமல் அருகில் உள்ள தேவாலயத்துக்கு வழிபடச்சென்றுள்ளனர்.
பின்னர் 2 மணியளவில் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் வைத்திருந்த 5 பவுன் மதிப்புள்ள 5 தங்கக்காசுகள் 4 பவுனில் 2 தங்கச் சங்கிலி, ஒரு பவுன் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்கள் மற்றும் ரூ.1900 ஆகியன திருட்டுப்போனது தெரியவந்தது.
பெண் கைது
இது குறித்து துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த நகைகளைத் திருடியதாக கரூர், வெங்கமேட்டை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மனைவி ரமணியை 29 காங்கேயம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் கரூர் பகுதியில் இருந்து பஸ் ஏறிவந்து, பூட்டியிருந்து ஆளில்லாத வீடுகளில் ரமணி திருடியது தெரிய வந்தது. பின்னர் ரமணியை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து திருட்டுப்போன 10 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.
Related Tags :
Next Story