சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 10 April 2021 11:49 PM IST (Updated: 10 April 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே பனங்குடி கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பொறையாறு:
பொறையாறு அருகே பனங்குடி கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சீதளாதேவி மாரியம்மன் கோவில் 
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே நல்லாடை ஊராட்சியை சேர்ந்த பனங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி உற்சவம் விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான  தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 
தீ மிதித்தனர்
பின்னர் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்யும் வகையில் அலகு காவடி, பால் காவடி ஆகியவைகளை மேளதாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று தீ மிதித்தனர். சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து வந்து தீ மிதித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பனங்குடி, கொத்தங்குடி, குரும்பக்குடி, எரவாஞ்சேரி, நல்லாடை, கொங்கனோடை, கீழ அக்ரஹாரம் ஆகிய பகுதி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story