6 மயில்களை கொன்று கடத்திய 2 பேருக்கு வலைவீச்சு


6 மயில்களை கொன்று கடத்திய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 April 2021 12:23 AM IST (Updated: 11 April 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

மயில்களை கொன்ற 2 பேைர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  அண்ணாபண்ணை வளைவு அருகே அன்னவாசல் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அதில் வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக சென்றனர். அந்த மோட்டார் சைக்கிளில் 2 சாக்கு மூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். போலீசார் பின்தாடர்ந்து வருவதை கண்டதும் சாக்கு மூட்டைகள், ஒரு நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.  அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் 6 மயில்கள் இருந்தன.  இதனையடுத்து இறந்த மயில்கள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின்பேரில் போலீஸ் நிலையம் வந்த மாவட்ட வனத்துறை அலுவலர் சமீர் அஹமதுவிடம் இறந்த 6 மயில்களும் ஒப்படைக்கப்பட்டன. மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர்கள் மயில்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்று ஏதோ காரணத்துக்காக கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தப்பி சென்றவர்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story