சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மாவட்டம் முழுவதும் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளித்து முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் சிவகங்கையை அடுத்த கண்டாங்கிபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மந்திரகாளி தலைமையில் ஊராட்சி செயலர் சிலம்பரசன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் வீதி, வீதியாக சென்று கிருமிநாசினி தெளித்தும் கிராம மக்களுக்கு முக கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.