முட்புதரில் தீப்பிடித்ததால் பரபரப்பு
அருப்புக்கோட்டை அருகே முட்புதரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி அருகே துணை மின் நிலையம் அமைந்துள்ளது. விருதுநகர் ரோட்டில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தை சுற்றி ஏராளமான செடிகள், முட்புதர்கள் காய்ந்த நிலையில் கிடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காய்ந்த முட்புதர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் துணை மின் நிலையம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து துணைமின் நிலைய பணியாளர்கள் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டியன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விைரந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story