ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 11 April 2021 12:36 AM IST (Updated: 11 April 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

சிங்கம்புணரி,

 சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் பிரான்மலை, காளாப்பூர், செவல்பட்டி உள்பட 30 ஊராட்சி மன்ற தலைவர்களும், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் அனைத்து ஊராட்சிகளிலும் தினசரி கிருமி நாசினி தெளிப்பது, கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது, முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் தினகரன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அருள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story