வாலிபர் சாவில் மர்ம இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
வாலிபர் சாவில் மர்ம இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் அருகே உள்ள வல்லத்திராகோட்டையை சேர்ந்தவர் முகமது அசாருதீன்(வயது 23). அவர் கடந்த 6-ந் தேதி அரிமளம் அருகே உள்ள மிரட்டுநிலையில் சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்து விட்டார். அவர் மீது அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அசாருதீன் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வல்லத்திராகோட்டை கடைவீதியில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் உறவினர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story