மாவட்ட செய்திகள்

தூய மங்கள அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி + "||" + Pure Mangala Mother Temple Festival

தூய மங்கள அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி

தூய மங்கள அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி
தூய மங்கள அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தூய மங்கள அன்னை ஆலய திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 3 சப்பரங்களில் பவனி நடந்தது. சப்பரத்தில் மங்கள அன்னை சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் கடைசி நாளாக நேற்று இரவு 5 சப்பரங்களில் பவனி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளால் நேற்று முன்தினம் இரவே 5 சப்பரங்களில் தூய மங்கள அன்னை, லூர்து மாதா, உயிர்த்த ஆண்டவர், செபஸ்தியார், மைக்கேல் சம்மனசு ஆகியோரின் சொரூபங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆடம்பர தேர் பவனி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தது. இதில் கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனர். வருகிற 15-ந் தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வனக்கோவிலில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட வினோத திருவிழா
தா.பழூர் அருகே வனக்கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா கடந்த 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. இதில் பக்தர்கள் ஆடுகள் பலியிட்டு, நேர்த்திக்கடனாக வீச்சரிவாள் செலுத்தி வழிபட்டனர்.
2. சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது
சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
3. திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
செந்துறை அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
4. தூய மங்கள அன்னை ஆலய திருவிழா
தூய மங்கள அன்னை ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது.
5. தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் உலா
தாயமங்கலம் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா வந்தார்.