கொரோனா பரவலை தடுக்க வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


கொரோனா பரவலை தடுக்க வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 11 April 2021 12:51 AM IST (Updated: 11 April 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 21-ந் தேதி வரை கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டத்தில் கோர்ட்டுகளில் பணியாற்றக்கூடிய நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கோர்ட்டுகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கோா்ட்டுகளை மூடவேண்டும். இதனால் கோர்ட்டுகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோர்ட்டு வளாகங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுத்திட வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் வக்கீல்கள் அலுவலகம், கோர்ட்டு வளாக பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story