விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமை தாங்கினார். தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம், மாநில துணைச் செயலாளர் (தேர்தல் பிரிவு) தனக்கொடி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, அரக்கோணத்தை அடுத்த சோகனூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குற்றவாளிகளை வன்கொடுமை மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன், ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் இலக்கியதாசன், ஒன்றிய செயலாளர்கள் உத்திராபதி, தங்கராசு, நகர செயலாளர் தலித்தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story