கட்டையால் அடித்து விவசாயி கொலை; மகன் கைது


கட்டையால் அடித்து விவசாயி கொலை; மகன் கைது
x
தினத்தந்தி 11 April 2021 12:53 AM IST (Updated: 11 April 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையத்தில் விவசாயியை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பாளையம்:

விவசாயி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மூர்த்தியான் காலனி தெருவை சேர்ந்தவர் குஞ்சு (வயது 75). விவசாயி. இவரது மகன் வேல்முருகன் (50). தையல் தொழிலாளி.
உடையார்பாளையத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக சாலைக்கு அருகே இருந்த குஞ்சுவுக்கு சொந்தமான இடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டு, அவரது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
உருட்டுக்கட்டையால் தாக்கினார்
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி, கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை தருமாறு குஞ்சுவிடம், வேல்முருகன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குஞ்சுவை, வேல்முருகன் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குஞ்சு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
கொலை வழக்கு
குஞ்சு தாக்கப்பட்டது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசக்கரவர்த்தி ஏற்கனவே வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தார். தற்போது குஞ்சு இறந்ததால், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story