விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2021 1:01 AM IST (Updated: 11 April 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ெபரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரக்கோணம் அருகே நடந்த தேர்தல் தகராறில் அர்ஜூன், சூர்யா ஆகிய 2 வாலிபர்கள் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், பா.ம.க.வை தடை செய்ய வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர் கிட்டு, மாநில செயலாளர் வீர.செங்கோலன் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் தங்கராசு, அக்ரி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதே சம்பவத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் காந்தி சிலை முன்பு மாநில செயலாளர் வழக்கறிஞர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோரிக்கைகளை விளக்கி மண்டல ஒருங்கிணைப்பாளர் நீலமேகம், மாவட்ட தலைவர் ஆனந்தன், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்தும், இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரியும் மேற்கு வானொலித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், பேராசிரியர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story