தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி மாணவி
தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாணவி தங்கம் வென்றார்
செம்பட்டு
டெல்லியில் கடந்த 6-ந்தேதி முதல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை காமன்வெல்த் ஸ்டேடியத்தில் பல்வேறு வகையான 3-வது தேசிய சீக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருச்சியை சேர்ந்த சுகித்தா பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்றார். அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி சுகித்தா கூறும் போது, நான் முதல் முறையாக துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்றேன். நான் என்னுடைய கேட்டகிரியில் இந்தியா முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் ஆரம்பத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தாலும் உடனடியாக சரி செய்து கொண்டு சுட ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் 60 ரவுண்டுகள் சுட வேண்டும் அதை நான் 48 நிமிடத்தில் முடித்து விட்டேன். நான் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் சிலம்ப போட்டியில், தனித்திறமை பிரிவில் ஒரு தங்கம், சண்டை பிரிவில் ஒரு தங்கம் மற்றும் சுருள் வீச்சில் ஒரு வெள்ளி வென்றுள்ளேன் என்றார்.
Related Tags :
Next Story