திருச்சியில் உள்ள பூங்காவில் பிணமாக கிடந்த பிரியாணி மாஸ்டர்
திருச்சியில் உள்ள பூங்காவில் பிரியாணி மாஸ்டர் பிணமாக கிடந்தார்.
திருச்சி,
திருச்சி தென்னூர் இதாயத்நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 32). குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து, பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை முகமது இஸ்மாயில் தென்னூர் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் உள்ள சிறிய பூங்காவில் பிணமாக கிடந்தார்.
இதை கண்ட அந்த பகுதியினர் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமான மது போதையில் அவர் இறந்தாரா? அல்லது அவரது சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகமது இஸ்மாயிலுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story