சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி


சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே  அனுமதி
x
தினத்தந்தி 11 April 2021 1:05 AM IST (Updated: 11 April 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு, 
கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
சுந்தரமகாலிங்கம் கோவில் 
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்   சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பங்குனி மாத அமாவாசையையொட்டி 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி செல்ல தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். 
கேட் மூடல் 
இந்தநிலையில் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் ஒவ்வொருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 
முக கவசம் அணிந்தவர்கள், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 10 மணி அளவில் மலையேறி சென்று வழக்கமாக நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் காலை 10 மணிக்கு வனத்துறை கேட் மூடப்பட்டது.
ஏமாற்றம் 
அதன் பிறகு வனத்துறை கேட்டின் முன்பு வருகை தந்த பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டி வனத்துறை கேட்டை திறக்க கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அதன் பின் வருகை தரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு கூறினர். இதையடுத்து பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு  சாமி தரிசனம் செய்துவிட்டு மலையேற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இன்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

Next Story