சப்-கலெக்டர் ஆய்வு


சப்-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2021 1:15 AM IST (Updated: 11 April 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி பஸ்நிலையம் பகுதியில் சப்-கலெக்டர் ஆனந்தி ஆய்வு மேற்கொண்டார்.

பழனி: 

பழனி பஸ்நிலையம் பகுதியில்  சப்-கலெக்டர் ஆனந்தி ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பஸ்களில் ஏறி பயணிகள் முககவசம் அணிந்துள்ளனரா என பார்வையிட்டார். 

தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள கடைகள், ஓட்டல்களில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

பின்னர் அங்கிருந்து மார்க்கெட் பகுதிக்கு சென்ற அவர், வியாபாரிகளிடம் முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம்,

 அவர்களிடம் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்துங்கள் என்று கூறினார்.

 முன்னதாக மார்க்கெட் செல்லும் வழியில் முக கவசம் அணியாமல் நடந்து வந்த மக்களிடம் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டார். 

இந்த ஆய்வில் தாசில்தார் வடிவேல்முருகன், அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

இந்த ஆய்வை தொடர்ந்து பழனி பகுதியில் முக கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்தாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story