போலீசாருக்கு கபசுர குடிநீர்
நெல்லையில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நெல்லை, ஏப்:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) சீனிவாசன் கலந்துகொண்டு, போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதில் ஏராளமான போலீசார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story