விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பணகுடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பணகுடி, ஏப்:
அரக்கோணம் அருகே சோகனூரில் நடந்த இரட்டைக்கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பணகுடி பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் உள்பட 45 பேரை பணகுடி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story