புளியரையில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்


புளியரையில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 April 2021 1:40 AM IST (Updated: 11 April 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

புளியரையில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் செயல்பட்டு வருகிறது. பஸ் பயணிகளுக்கு பரிசோதனை செய்த பின்னரே தமிழகம் வர அனுமதிக்கப்படுகிறர்கள்.

செங்கோட்டை ஏப்:
தமிழகம், கேரள எல்லையான புளியரையில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, பயணிகளை பரிசோதனை பின்னரே தமிழகம் வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்

செங்கோட்டை அருகே உள்ள தமிழக எல்லைப் பகுதியில் இருக்கும் புளியரையில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் இயங்கி வருகிறது. கேரளாவில் கொரோனா அதிகமாக இருந்து வருவதாலும், தற்போது தமிழகத்திலும் அதிகமாக பரவி வருவதால் மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் சுகாதார பணிகள் இயக்குனர் அறிவுரையின்படி கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரும் பயணிகளை முகாமில் பரிசோதனை செய்த பின்பு தமிழகத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.

பரிசோதனைக்கு பிறகு அனுமதி

தென்காசியில் இருந்து செங்கோட்டை வழியாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் கோட்டை வாசலுக்கு தமிழக அரசு பஸ்கள் சென்று வருகிறது. பின்பு அங்கு இருந்து கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகிறது.
தமிழகத்திற்குள் வரும் பயணிகளை முகாமில் தீவிரமாக கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்த பின்பு மீண்டும் பஸ்சில் பயணம் செய்வதற்கு மருத்துவ குழு அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். 
மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளித்து, கொரோனா சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர் மருத்துவ முகாமில் சுகாதார அதிகாரிகள் இரவு பகலாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

Next Story