கீழடியில், 2 மண்கிண்ணங்கள் கிடைத்தன
கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 மண்கிண்ணங்கள் கிடைத்தன.
திருப்புவனம்,
கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 மண்கிண்ணங்கள் கிடைத்தன.
கீழடி
சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி நாகரிகம் உலகிற்கு எடு்த்துரைத்து உள்ளது. தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
2 மண்கிண்ணங்கள்
இந்த நிலையில் கீழடியில் உள்ள 2 குழிகளில் நேற்று நடந்த அகழாய்வில் மண் கிண்ணங்கள் கிடைத்தன. ஒரு குழியில் கருப்பு சிவப்பு வண்ணங்களுடன் மண் கிண்ணமும், மற்றொரு குழியில் சாதாரண மண் கிண்ணமும் கிடைத்துள்ளது. இந்த 2 மண் கிண்ணங்களும் பழங்கால தமிழர்கள் பயன்படுத்தியவைகள். தொடர்ந்து குழிகள் ஆழமாக தோண்ட, தோண்ட இன்னும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story