கண்மாயில் மண் அள்ளிய 2 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கண்மாயில் மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை பகுதியில் தாதரேயன்பட்டி கண்மாயில் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் 2 பேர் மண் அள்ளிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கொங்கபட்டியை சேர்ந்த முத்துராமன் (வயது 25), புல்லகாடுபட்டியை சேர்ந்த முத்துபெருமாள் (40) என்றும், அவர்கள் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளி செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story