105 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 105 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 105 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுமதிசாய்பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத் ராஜ், குடும்ப நல நீதிபதி தமிழரசி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி உதய வேலவன், சார்பு நீதிபதி மோகனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதித்துறை நடுவர் (1) பாரதி, மற்றும் வக்கீல்கள் ராம்பிரபாகர், ராதாகிருஷ்ணன், ஜானகிராமன், நாகேஸ்வரன் ஆகியோர் விசாரித்தனர்.
105 வழக்குகள் தீர்வு
இதேபோல வங்கிக்கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 250 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 8 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.8 லட்சத்து 85 ஆயிரத்து 20 வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் மணிமேகலை, பானுமதி, விவேகானந்த், கோடீஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர். மொத்தம் 105 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story