சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது
தென்காசியில் சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி, ஏப்:
தென்காசி கீழப்புலியூரை சேர்ந்தவர் ராமையா மகன்கள் சிதம்பரம் (வயது 49) முத்துக்குமார் (37). இவர்களுக்கு இடையே சொத்து விஷயமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் முத்துக்குமார் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிதம்பரம் சொத்து பிரச்சினை தொடர்பாக பேசினாராம். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் சிதம்பரம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்குமாரை வெட்ட முயன்றார். அப்போது முத்துக்குமார் அதனை தடுக்கவே அவரது கையில் பலமாக வெட்டு விழுந்தது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிதம்பரத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story