சேலத்தில் பட்டறையில் நிறுத்தி இருந்த பஸ் தீப்பிடித்து எரிந்து சேதம்


சேலத்தில் பட்டறையில் நிறுத்தி இருந்த பஸ் தீப்பிடித்து எரிந்து சேதம்
x
தினத்தந்தி 11 April 2021 3:58 AM IST (Updated: 11 April 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பட்டறையில் நிறுத்தி இருந்த பஸ் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

சேலம்:
சேலத்தில் பட்டறையில் நிறுத்தி இருந்த பஸ் தீப்பிடித்து எரிந்து சேதமானது. 
பஸ் தீப்பிடித்து எரிந்தது
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பஸ் பாடிகட்டும் பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இது குறித்து பட்டறை உரிமையாளருக்கும், சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் வீரர்கள் பஸ்சில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். இதில் அந்த பஸ் முழுவதுமாக எரிந்து சேதமானது. 
மற்றொரு பஸ்
இதனிடையே  தீ அங்கிருந்த மற்றொரு பஸ் மீது பரவி எரிய தொடங்கியதும், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த பஸ்சில் எரிந்த தீயை உடனே அணைத்தனர். இதனால் அந்த பஸ் சேதம் அடையவில்லை.
 இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். யாராவது பஸ்சுக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story