கோரிமேடு அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் செயல்படும்-மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்


கோரிமேடு அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் செயல்படும்-மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 11 April 2021 4:47 AM IST (Updated: 11 April 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம்:
கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் முககவசம் அணிவதும், சமூக இடைவெளி கடைபிடிப்பதும், கொரோனா தொற்று பரிசோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே மணியனூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. 
சித்தா சிகிச்சை மையம்
மேலும் கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவர்களால் சிகிச்சை வழங்கும் வகையில் சித்தா கொரோனா சிகிச்சை தற்காலிக மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மையம் நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற சித்தா மருத்துவ முகாமையும், திருவாக்கவுண்டனூரில் உள்ள செயினட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இயற்கை மருத்துவ சிறப்பு முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் வைட்டமின் மருந்துகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், சித்தா மருத்துவர்கள் வெற்றிவேல், ஆனந்த், கண்ணன், சத்தியநாராயணன், உதவி ஆணையாளர் சரவணன், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story