கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சத்தை தொட்டது: ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சத்தை தொட்டது: ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 April 2021 6:01 AM IST (Updated: 11 April 2021 6:07 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 97 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்து 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 424 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில்  கொரோனாவுக்குஇறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் இதே நாளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளதுபொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story