குடும்ப தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


குடும்ப தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2021 8:16 AM IST (Updated: 11 April 2021 8:54 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பொச்சாரம்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). விவசாயி. இவரது மனைவி ஜானகி. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை, உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story