சாத்தான்குளம் ஜெபஞானபுரம் ஜெபஆலயத்தில் அசனவிழா


சாத்தான்குளம் ஜெபஞானபுரம் ஜெபஆலயத்தில் அசனவிழா
x
தினத்தந்தி 11 April 2021 4:36 PM IST (Updated: 11 April 2021 4:36 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் ஜெபஞானபுரம் ஜெபஆலயத்தில் அசனவிழா நடைபெற்றது.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஜெபஞானபுரம் ஜெப ஆலய 81-வது அசனவிழா 7-ஆம்தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளில் இரவு 7 மணிக்கு சிறப்பு கன்வென்சன் கூட்டம் நடைபெற்றது. மறுநாள் மாலை 5 மணிக்கு விளையாட்டு போட்டிகள், இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் இன்னிசை விருந்து, இரவு 8 மணிக்கு ஐக்கிய விருந்து நடந்தது. நிறைவு நாளில் காலை 4 மணிக்கு அசன உலை ஏற்றி ஜெபித்தல், 5 மணிக்கு ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெற்றது. இதில் நேர்ச்சை பொருள்கள், அசன பொருள்கள் வைக்கப்பட்டு சேகரகுருவானவர் பாஸ்கர் அல்பரட்ராஜன் சிறப்பு ஜெபம் நடத்தினார். தொடர்ந்து ஸ்தோத்திர காணிக்கை படைக்கப்பட்டது. காலை 8 மணிக்கு ஐக்கிய விருந்து, மதியம் 12 மணிக்கு அசன ஆயத்த ஜெபம், சிறப்பு அசனம் நடைபெறறது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

Next Story