8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்; போக்சோவில் 3 பேர் கைது
8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை:
வடமதுரையை அடுத்த சிலுவத்தூர் அருகே உள்ள ஆர்.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்துகொண்டு அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (65), குருநாதன் (70) ஆகியோரும் மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக 3 பேரும் மிரட்டி உள்ளனர். இதையடுத்து அந்த மாணவி உயிருக்கு பயந்து வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்தாள்.
இந்தநிலையில் மாணவியை தங்கவேல் தனியாக அழைத்து செல்வதை அதே பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது தங்கவேல் உள்பட 3 பேரும் தனக்கு செய்த பாலியல் கொடுமைகள் குறித்து மாணவி கண்ணீர் மல்க கூறினாள்.
இதைக்கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்றல் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், பெருமாள், குருநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Related Tags :
Next Story